தொடருவோர்

Thursday, October 20, 2011

எல்லோர்க்கும் பெய்யும் மழை



என்னை சிலிர்க்க வைத்த விஷயம்
-------------------------------
  என் தோழி என்னுடன் பகிர்ந்து கொண்ட ஒரு விஷயத்தை அவரது வேண்டுகோளுக்கு இணங்க வாசகர்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
    என் தோழியின் கணவர்,வங்கியில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.அவர் பணியில் சேர்ந்த ஆண்டு, ,தன்னுடன் வேலை பார்த்த ஒரு நண்பர் ,ரூ.400/கடனாகக் கேட்க ,இவரும் கடனாக நினைக்காமல் உதவியாக அளித்திருந்தார்.[64ம் ஆண்டில் 400 ரூபாய் என்பது சிறிய தொகை இல்லை.]
     அதன்பிறகுஇருவருமேவேலைநிமித்தம்பலஊர்கள்மாற்றலாகி,ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளவோ சந்திக்கவோ வாய்ப்பு கிட்டாமல், வேலை பளுவில் மூழ்கிவிட்டனர்.
    சமீபத்தில் என் தோழியின் வீட்டுக்கு ஒரு தொலை பேசி அழைப்பு வருகிறது.46 ஆண்டுகளுக்குமுன் ,கடன் வாங்கிய நண்பரின் அழைப்பு அது.”பல வருடங்களாக உங்கள் விலாசம் தேடி கண்டுபிடித்து,ஃபோன் பண்ணுகிறேன்.நாளை வீட்டுக்கு வருகிறேன் என்று கூறி வரும் வழியைக் கேட்டுக் கொண்டார்.
     மறுநாள் வீட்டுக்கு வந்த நண்பர்,மலரும் நினைவுகளாக அனைத்தையும் பகிர்ந்து கொண்டு,விடை பெற்றவராய் எழுந்தவர்,நண்பர் கையில் ஒரு கவரைத் தந்தார்.
    கவரைத் திறந்து பார்த்த இவர்,அதில் ரூபாய் 38 ஆயிரத்துக்கும் கூடுதலான, ஒரு காசோலையைக் கண்டு ,
”என்ன இது!?”என்று ஆச்சரியம் கலந்து கேட்டவருக்கு
  அந்த நண்பர் சொன்ன பதில்,”நான் உங்களிடம் வாங்கிய ரூபாய் 400 ஐ,46 ஆண்டுக்கான ,வட்டியும் முதலுமாகத் திருப்பியிருக்கிறேன்...”
    என் தோழியும் அவரது கணவரும் ,”இப்படியும் உண்டா” என்று திகைத்து நிற்க ,இருவரையும்,நன்றியுடன் ஆசுவாசப் படுத்தியபின் விடை பெற்றார் அந்த நண்பர்.
   இந்த சம்பவத்தை என்னோடு பகிர்ந்ததோடு நில்லாமல்,”நீங்கதான் பிளாக் வைத்திருக்கிறீர்களே,அதில் எழுதுங்கள்....இப்படியும் சிலர் இருக்கிறார்கள் என்று எல்லோருக்கும் தெரியட்டும் ...”என்று அன்பு கட்டளை இட்டார்.
   அவர் பகிர்ந்துகொள்ளச் சொல்லாததையும், நான் பகிர்ந்து கொள்ள ஆசைப் படுகிறேன்.கடனை வட்டியுடன் சேர்த்துத் திருப்பிய நண்பரது நாணயம் போற்றப் படவேண்டியதுதான்,என்றாலும்,என் தோழியின் செய்கை, அதையும் தாண்டி ஒரு படி மேலே நின்றது.
    எதிர்பாராத சமயத்தில் ஒரு பெரும் தொகை தங்களைத் தேடிவந்த சந்தோஷத்தை,அவர்கள் எப்படிக் கொண்டாடியிருக்கிறார்கள் என்று பாருங்கள்.
 ”எங்கள் வீட்டில் வேலை பார்த்துவரும் பெண் வீடு கட்டிக் கொண்டிருக்கிறாள்,
”இந்தப் பணம் எங்களிடம் இருந்தால் அக்கெளண்டில் சேருமே தவிர எங்களுக்கு,அவசரத் தேவை என்ற கட்டாயத்தில் அந்தப் பணம் இல்லை,
    கடந்த 11 வருடங்களாக எங்களிடம் வேலை பார்க்கும் பெண்ணுக்குக் கொடுத்தால் பிரயோசனமாக இருக்கும்,
என்று கருதி அவளுக்கு அப்படியே பரிசாகத் தந்துவிட்டோம்...”என்று சொன்னதைக் கேட்டதும்
இந்த முறை ,இப்படியும் உண்டா?!!!என்று   நான் திகைத்து நிற்கிறேன்

.சமயத்தில் உதவிய நண்பரிடம் பெற்ற கடனை மறக்காமல்,பல ஆண்டுகள் கழித்து ,வட்டியுடன் திருப்பிய ஒருவரது நாணயம் என்னை என்னை வியக்க வைத்தது.என்றால்,எதிர்பாராமல் வந்த பெரும் தொகையை ,தேவையான ஒருவருக்குப் பரிசாகத் தந்த ,என் தோழியின் ஈகை உள்ளம் சிலிர்க்க வைத்தது.
இவர்களைப்போல் ஒரு சிலர் இருப்பதால்தான் வருணபகவான் விளைநிலம் பார்த்து,தன் கருணையைக் காட்டுகிறார் என்பதை உணர வைத்தது.

:நல்லார் ஒருவர் உளறேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை.:
என்று ஔவையார் எவ்வளவு அழகாகக் கூறியிருக்கிறார் பாருங்கள்.

18 comments:

Ramani said...

அருமையான மனிதர்கள்
அருமையான நிகழ்வு
அருமையான பதிவு
வெறும் நயவஞ்சகம் ஏமாற்றுதல் பித்தலாட்டம் என்வே
கேட்டுக் கேட்டு புண்ணாகிப் போன காதுகளுக்கு
தங்கள் பதிவு தேனாய் இனித்தது
தலைப்பும் பதிவும் அருமை
தொடர வாழ்த்துக்கள்

Kannan said...

மிகவும் அருமையான பகிர்வு....
தொடர்ந்து எழுதுங்கள்.....

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

கோமதி அரசு said...

இவர்களைப்போல் ஒரு சிலர் இருப்பதால்தான் வருணபகவான் விளைநிலம் பார்த்து

தன் கருணையைக் காட்டுகிறார் என்பதை உணர வைத்தது.
நல்லார் ஒருவர் உளறேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை.என்று ஔவையார் எவ்வளவு அழகாகக் கூறியிருக்கிறார் பாருங்கள்.//

அருமையான பதிவு.

middleclassmadhavi said...

அதிசயமே அசந்து போகும் அதிசயங்கள் தாம்! இதனால் தான் இன்னும் மழை பொழிகிறது!! பகிர்வுக்கு நன்றி!

அருள் said...

தியாகத்தின் வேரைத்தேடி: தென் ஆப்பிரிக்காவிலிருந்து மயிலாடுதுறைக்கு ஒரு பயணம்

http://arulgreen.blogspot.com/2011/10/blog-post_19.html

வெங்கட் நாகராஜ் said...

இரண்டு பேருமே அதிசயிக்க வைக்கிறார்கள்.. நல்ல மனது இருவருக்குமே.. பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

Philosophy Prabhakaran said...

அவரோட நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு மேடம்...

thirumathi bs sridhar said...

வியப்புதான்.எனினும் இவ்ளோ தொகையை உங்க தோழி வாங்கியிருக்க கூடாதுன்னு நினைத்தேன்.ஆனால் அதை வைத்து பெரிய உதவி செய்திருப்பதில் மகிழ்ச்சி.இரண்டுமே ஆச்சர்யமான விசியம்தான்.

ராமலக்ஷ்மி said...

திருப்பிக் கொடுத்தவரின் நேர்மை, தோழி எடுத்த முடிவு இரண்டுமே பாராட்டுக்குரியவை. நல்ல பகிர்வுக்கு நன்றி.

சகாதேவன் said...

அந்த
நல்லார்
இருவருக்கும்
பாராட்டுக்கள்.
வாழ்த்துக்கள்

சகாதேவன்

Kanchana Radhakrishnan said...

அருமையான பதிவு.பகிர்வுக்கு நன்றி.

மாலதி said...

அருமையான பகிர்வு....
நேர்மை, தோழி எடுத்த முடிவு இரண்டுமே பாராட்டுக்குரியவை. நல்ல பகிர்வுக்கு நன்றி

வியபதி said...

வாங்கிய பணத்தை (வட்டியில்லாமல்) திரும்பக் கொடுத்தாலே அது பெரிய விஷயம். அப்படியிருக்க வட்டியோடு சேர்த்துக் கொடுத்தவர் மாமனிதர்தான். அதையும் தேவைப்படுபவர்களுக்கு கொடுத்துதவியவர்களை எப்படிப் பாராட்டுவது என்றே புரியவில்லை. இவர்களைப் போன்ற சிலர் அங்கங்கே இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களைப் பற்றி எழுதி வெளிச்சத்துக்குக்கொண்டுவந்த உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

Lakshmi said...

திருப்பிக் கொடுத்தவரின் நேர்மை, தோழி எடுத்த முடிவு இரண்டுமே பாராட்டுக்குரியவை. நல்ல பகிர்வுக்கு நன்றி.

cheena (சீனா) said...

அன்பின் கோமு அக்கா

இருவரின் அன்பும் பண்பும் பாராட்டுக்குரியவை. இருவர் செய்த செயல்களும் அருமை.

//வருணபகவான் விளைநிலம் பார்த்து,தன் கருணையைக் காட்டுகிறார் என்பதை உணர வைத்தது.

:நல்லார் ஒருவர் உளறேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை.:
என்று ஔவையார் எவ்வளவு அழகாகக் கூறியிருக்கிறார் பாருங்கள்.// உண்மை உண்மை -

நல்வாழ்த்துகள் அக்கா - நட்புடன் சீனா

goma said...

ரமணி
கண்ணன்
கோமதி அரசு
மிடில்க்ளாஸ் மாதவி
அருள்
வெங்கட் நாகராஜ்
ஃபிலாசஃபி பிராபாகரன்
காஞ்சனா
ராமலஷ்மி
சகாதேவன்
திருமதி பிஎஸ் ஸ்ரீதர்
மாலதி
வியபதி
லஷ்மி
சீனா
அனைவருக்கும் என் மனம் கனிந்த நன்றி

இராஜராஜேஸ்வரி said...

:நல்லார் ஒருவர் உளறேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை.:
என்று ஔவையார் எவ்வளவு அழகாகக் கூறியிருக்கிறார் பாருங்கள்.

நன்றி மழையில் நனைந்த சிலிர்ப்பான சம்பவங்கள்.. பாராட்டுக்கள்..

KANMANI said...

மிகவும் அருமை... இக்கதையை நான் ஜனவரி மாத மயில் இதழில் படித்து மகிழ்வு கொண்டேன்..இக்கதைக்கு தாங்கள் வழங்கிய தலப்பும் பிரமாதம்...
தொல்லுலகில் நல்லார் ஒருவர் உளரேல், அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை...

list