தொடருவோர்

Saturday, September 3, 2011

நான் யார் ?நான் யார்? நீ யார்?

நான் யார்?
===========
நேற்று நான் யார்?
இன்று நான் யார்?
நாளை நான் யார்?
அவனுக்கு நான் யார் ?
எனக்கே நான் யார்?
புரியவில்லை ,எதுவும்
தெரிய வில்லை.
தெரிவது போல் தெரிகிறது
ஆனால் புரியவில்லை
புரிவது போல் புரிகிறது
ஆனால் ,தெரிய வில்லை.
நேற்று நான் புழுவாய் நெழிந்திருப்பேன்
இன்று நான் மனிதனாய் வாழ்கின்றேன்
நாளை நான் பூண்டாக
பூமியில்முளைக்கலாம்
வட்டமிடும் கழுகாய்
வானில் பறக்கலாம்

இதில் மெய் மட்டும் நானா
அல்லது
மெய் கூட பொய்யா.
ஆத்மா மட்டும் நானா அல்லது
ஆத்மா கூட அனர்த்தமா?
புரிய வில்லையே!
எனக்கே நான் யார் என்று
தெரியவில்லை இதில்
உனக்கு நான் சொந்தமென்றால்
வியப்பாய் இல்லை?
உனக்கே நீ யார் என்று புரிய வில்லை
இதில் எனக்கு நீ பந்தமென்றால்
நகைப்பாய் இல்லை?
நமக்குள் நாம் யாரென்றே தெரியவில்லை
இதில் நீ எனக்குச் சொந்தமென்றால்
வேடிக்கையாய் இல்லை?
இங்கே இன்று

ஒருவனுக்கு நான் மகன்
ஒருத்திக்கு நான் தம்பி
ஒருவனுக்கு நான் மாமன்
ஒருத்திக்கு நான் மச்சான்
இருந்து விட்டுப் போகட்டும்
இறைவனுக்கு நான் யார்?
அது தெரிந்தால் போதும்
என் ஜென்மம் சாபல்யமாகும்
அடுத்த ஜென்மத்தில்
உயிரும் மெய்யும்
உவகையுடன் ஒன்றாகும்.
சொர்க்கமோ நரகமோ
ஏற்பது எளிதாகும் .

20 comments:

MANO நாஞ்சில் மனோ said...

இறைவனுக்கு நான் யார்?
//

தெளிவா குழப்ப வேண்டியவரை குழப்பியாச்சு சந்தோசமா...?

MANO நாஞ்சில் மனோ said...

வீட்ல கிச்சன்ல ஏசி இல்லியோ....பாளையங்கோட்டை இப்பிடி தெளிவா குழப்பாம குழப்பி அடிக்குது என் மண்டையில....!

MANO நாஞ்சில் மனோ said...

இதை இதோட நிறுத்தனும் இல்லைனா கமல்'ட்டே பிடிச்சி குடுத்துருவேன், ரெண்டு பெரும் பேசி புரியாம கீழ்பாக்கம் பக்கமா ஒடுங்கன்னு...

ஆர்.சண்முகம் said...

என்னாக்கா ஒரே புலம்பலா இருக்கு

ஆர்.சண்முகம் said...

நான் யார்?

goma said...

இத இதத்தான் நான் எதிர்பார்த்தேன்....

இருந்தாலும் என்னமோ இவர் ரொம்பத் தெளிவா இருந்த மாதிரியும் நான் வந்து குழப்பின மாதிரியும் ....

உங்களை பொறுத்தவரை கமல் ஒரு பூச்சாண்டி மாதிரி இருக்கே

வெங்கட் நாகராஜ் said...

"ஒண்ணுமே புரியல உலகத்திலே....”

goma said...

வெங்கட் நாகராஜ்
உலகத்திலேதானே ஒன்னுமே புரியல என் கவிதை புரியுது இல்லையா அது போதும்

வெங்கட் நாகராஜ் said...

//வெங்கட் நாகராஜ்
உலகத்திலேதானே ஒன்னுமே புரியல என் கவிதை புரியுது இல்லையா அது போதும்//

நல்ல பதில்.. :))))))

goma said...

நாஞ்சில் மனோசொல்லிட்டார்
இதை இதோட நிறுத்தனும்
எல்லாரையும் நிறுத்தச் சொல்லுங்க...அப்புறம் நான் நிறுத்துறேன்....

goma said...

ஆர் சண்முகம்
இந்த வாரம் புலம்பல் வாரம்.....


ஆர்.சண்முகமும் நான் யார் என்று கேட்க ஆரம்பித்து விட்டார் ...யோசிங்க யோசிங்க யோசிச்சுட்டே இருங்க....

thirumathi bs sridhar said...

ஆன்மாவை தெரிந்துகொள்ள முயற்சிசெய்றீங்களோ?
பதில் தெரியாத கேள்விதான்.உங்களுக்கு நெற்றிக்கண் திறந்துவிட்டதுனு நினைக்கிறேன்.

goma said...

4 ஆண்டுகளுக்கு முன் திண்ணையில் பதிவான என் கவிதை என்று பிளாகில் பதிந்த இக்கவிதைக்கு திரு சீனா அவர்கள் இவ்வாறு பின்னூட்டமிட்டிருந்தார்



Blogger cheena (சீனா) said...

கோமதி,

புதுக்கவிதை எனினும் தத்துவக் கவிதை.
நாம் யார் எனத் தெரிந்து விட்டால் இவ்வுலகில் நமக்கு வேலை இல்லை. இறைவனுக்கு நாம் யார் ? அருமையான கேள்வி.

நல்வாழ்த்துகள்

April 22, 2008 8:49 AM

goma said...

நாஞ்சில் மனோ,ஆர்.சண்முகம் வெங்கட் ஆகியோரிடமிருந்து என்னைக் காப்பாற்றிய சீனா அவர்களுக்கு நன்றி

goma said...

thirumathi bs sridhar

புதுவரவு.வாங்க வாங்க
எனக்கு நெற்றிக்கண் திறந்துடுச்சா ...நீங்க வேற ..இந்தக் கவிதை[புலம்பலை] வாசித்த பின் நிறைய பேர் நெற்றிக்கண் திறந்தது போல் இருக்கிறது

உங்கள் பிளாக் சென்று வருகிறேன் வர்ர்ர்ர்ட்டா

goma said...

வெங்கட் நாகராஜ்

//வெங்கட் நாகராஜ்
உலகத்திலேதானே ஒன்னுமே புரியல என் கவிதை புரியுது இல்லையா அது போதும்//

நல்ல பதில்.. :))))))

பிளாகிலே இப்படியெல்லாம் பதில் சொல்லலேன்னா பொழைக்க முடியுங்களா

துஷ்யந்தன் said...

நல்ல கவிதை

Rathnavel said...

நல்ல தேடல்.
வாழ்த்துக்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_29.html

திவா said...

:-))

cheena (சீனா) said...

அன்பின் கோமு அக்கா - படிச்சுப் பதில் போடலாம்னு வந்தா - 4 வருசத்துக்கு முன்னாடியே நான் க்ருத்து சொல்லி இருக்கேன் - பரவால்ல - நல்வாழ்த்துகள் அக்கா - நட்புடன் சீனா

list