பெரிய பெரிய விஷயங்களையெல்லாம் பெரியவங்க பார்த்துப்பாங்க.என் சிற்றறிவுக்கு எட்டிய வரை நான் தணிக்கை செய்ய விரும்பும் விஷயங்களின் பட்டியல் :
ரஜினி ஷூ காலை கேமரா முன்னால் சுழட்டுவது.அவரை வாழவைத்த கேமராவை மட்டும் அவர் அவமதிக்கவில்லை,ரசிகர்கள் முகத்துக்கு நேரே நீட்டி அவர்களையும் அவமதிப்பதாக அமைந்திருக்கிறது என்பதை ரஜினி ஏன் உணரவில்லை.இவரைப்பார்த்து குட்டி குட்டி நடிகர்கள் கூட காலாட்டுகின்றனர்.ரஜினி ராணாவிலாவது ,இதைத் தவிர்க்கட்டுமே
பாதி சாப்பாட்டில் அல்லது முழுச்சாப்பாடிலேயே கோபம் வந்து தட்டிலேயே கைகழுவும் காட்சிகள் காட்டப் படக்கூடாது .குழந்தைகள் மனதில் பதியாதா இந்த காட்சி?.உணவை மதிக்க வேண்டும் என்று உணர்த்தவில்லையென்றால் கூட பரவாயில்லை,அவமதிக்காமல் இருக்கலாமே.
வாத்தியக்கருவிகளைப் போட்டு உடைப்பது .இது என்ன கூத்து?கதாநாயகி பிரிந்து போனால் வீணையும் வயலினும் கிடாரும் என்ன செய்யும்?தெய்வீகம் என்று போற்றப்படும் இசையை மதிக்க வேண்டாமா?
விவேக் சமீபத்தில் கையாளும் நகைச்சுவை காட்சிகள் அனைத்துமே ஊனமுற்றோரின் மனம் வேதனைப் படவைக்கும்படி அமைந்திருக்கின்றன.கண் தெரியாதவர்கள் போல் நடித்து சாலையைக் கடக்க இளம் பெண்ணின் வருகைக்காகக் காத்திருந்து வக்கிரமான புத்தியைக் காட்டும் வண்ணம் அமைந்த காட்சிகளை அனுமதிக்கக் கூடாது.இவை போன்ற காட்சிகளை ,விழி அற்றவர் அறிய முடியவில்லையென்றாலும் பார்த்தவர்கள் கூற மாட்டார்களா?
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களின் நட்பைப் பெற்று சமீபத்தில் நாட்டைப் பசுமையாக்கும் முயற்சியில் ஈடுபடுபவருக்கு ஒரு வேண்டுகோள்,திரைப்படத்தில் ’பச்சை பசுமை ’வேண்டாமே.
பள்ளியில் ஆசிரியரைக் கேலி செய்யும் காட்சிகள் இப்பொழுதெல்லாம் ரொம்பவே அதிகமாகி வருகின்றன.நிறுத்தினால் நல்லது.
அப்பாவை மதிக்காதபடி வசனங்களும் காட்சிகளும் நகைச்சுவை என்ற பெயரில் வலம் வருகின்றன.இது போன்ற காட்சிகளைப் பெரியவர்கள் பார்த்து சிரித்துவிட்டு போகலாம், சிறுவர்கள்?இயக்குனர்கள் யோசிக்க வேண்டாமா?
பழம்பெறும் நகைச்சுவை நடிகர்களை இமிடேட் செய்வதுபோல் அவர்களின் பெயரைக் கெடுக்கும் வண்ணம் சமீபத்தில் ஒரு படம் .ஒரு நடிகர், சுருளிராஜன் போல் நடிப்பார்.சுருளிராஜன் கொஞ்சம் கூட விரசம் கலக்காத நகைச்சுவையை நம்பி வெற்றி பெற்ற ஒரு நல்ல நகைச்சுவை நடிகர்.அவருக்கு மரியாதை செலுத்தவில்லையென்றாலும் பாதகமில்லை அவரது வேஷத்தில் தன் பாணியைப் புகுத்தி ,மறைந்த ஒரு நல்ல நடிகரின் இமேஜைக் கெடுக்கலாமா?
உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன் .திரைப்படங்கள் கொஞ்சம் சுத்தமாகட்டும்

24 comments:
அருமையான பதிவு.
வாழ்த்துக்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_16.html
ரத்னவேல்
தம்பதி சமேதரராக வந்து வாழ்த்தியமைக்கு நன்றி
நல்ல பதிவு...
இப்போது வரும் பெரும்பாலான படங்களில் இரட்டை அர்த்த வசனங்கள் தான் அதிகம்... அதுவும் நகைச்சுவை என்ற பெயரில் அசிங்கப்படுத்திக் கொண்டு இருக்கின்றனர்....
வெங்கட்நாகராஜ்
அதுவும் விவேக் வந்த பிறகு கொஞ்சம் அதிகமாகவே பரவி விட்டது.
vivek is better but santhanam is too much ...very good post ...
நல்ல யோசனைகள்.
கதாநாயகன் ஜாலிக்காகவே மதுவருந்தும் காட்சிகள் சமீப காலங்களில் சர்வ சாதாரணமாகி விட்டன. அதைக் கூடத் தடை செய்ய வேண்டும். வில்லன் கொடுமையானவன் என்று காட்டுவதற்காகக் காட்டப் படும் கொடும் வன்முறைக் காட்சிகளைத் தடை செய்ய வேண்டும்.
நியாயமான ஆதங்கங்கள் தான்.
சினிமா காரர்கள் யோசிக்க
ஆர்ம்பிச்சா நல்லது.
\\சுருளிராஜன் கொஞ்சம் கூட விரசம் கலக்காத நகைச்சுவையை நம்பி வெற்றி பெற்ற ஒரு நல்ல நகைச்சுவை நடிகர்.//
நல்ல நகைச்சுவை.ரெட்டை அர்த்த வசனங்களை,செய்கைகளை அறிமுகப்படுத்தியதே அந்த புண்ணியவான் தான்.
பொ. முருகன்
நீங்க அப்படியா சொல்றீங்க....இருந்தாலும் தற்பொழுது அதன் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது...
லஷ்மி
சினிமாக்காரங்க யோசிக்க மாட்டாங்க....
ஸ்ரீராம்
உங்கள் ஆதங்கமும் அவர்கள் உசுப்பினால் நல்லது
அஹ்மத்
vivek is better but santhanam is too much ...very good post ...
my opinion is just the reverse
உங்கள் கத்திரிக்கோலுக்கு நிறைய வேலை இருக்கும் போலிருக்கே. டைரக்டரிடம் திரைக்கதை, வசனம் எல்லாத்தையும் பூஜை போடும் முன் உங்களிடம் தரச்சொல்லுங்கள். படித்துப் பார்த்து கட் பண்ணி திருப்பிக் கொடுங்கள். இதனால் ஃபிலிமும் மிச்சமாகும்.
சகாதேவன்
சொன்ன முதல் விஷயமே அருமை!! :-))
middleclassmadhavi
இந்த விஷயம் பல வருடங்களாக மனதில் பிடிக்காத விஷயமாக இருந்தது...அதனால்தான் தொடக்கமே அருமையாகி விட்டது
சகாதேவன்
உண்மைதான் சில படங்களை நான் கத்திரிக்க ஆரம்பித்தால் டைட்டிலும் ,வணக்கமும் தான் மிஞ்சும்
// பாதி சாப்பாட்டில் அல்லது முழுச்சாப்பாடிலேயே கோபம் வந்து தட்டிலேயே கைகழுவும் காட்சிகள் காட்டப் படக்கூடாது //
நானும் ரொம்ப நாளா பீல் பண்ணும விஷயம்...
அப்பாவை மதிக்காதபடி வசனங்களும் காட்சிகளும் நகைச்சுவை என்ற பெயரில் வலம் வருகின்றன.இது போன்ற காட்சிகளைப் பெரியவர்கள் பார்த்து சிரித்துவிட்டு போகலாம், சிறுவர்கள்?இயக்குனர்கள் யோசிக்க வேண்டாமா?
நான் சொல்லுரனுங்க நிட்சயம் ஒருநாள் உங்க ஆச நிறைவேறனும் .
அதுக்கு என்னோட வாழ்த்துங்க .
அருமையான பதிவு, உங்களை போன்றவர்கள் தான் தணிக்கை குழுவுக்கு தேவை, உங்கள் என்னங்க நிறைவேற என் வாழ்த்துக்கள் அக்கா.
அப்புறம் நன்றி அக்கா,
என் தளத்துக்கு வருகை தந்தமைக்கு
இந்த சிறுவனின் தளத்துக்கும் உங்களை போன்ற திறமையான பெரியவர்கள் வந்து போவதை நினைக்கும் போது சந்தோஷத்தில் மனசு பறக்குது அக்கா,
நியாயமான ஆதங்கங்கள் தான்.
சினிமா காரர்கள் யோசிக்க
ஆர்ம்பிச்சா நல்லது.
நான் தணிக்கையாளரா இருந்தா: கடையில "நாளை கடன்" ன்னு போர்ட் இருக்குமே அந்த மாதிரி "நாளை அப்ரூவல்" ன்னு வெச்சுட்டு ஜாலியா வீட்டுக்கு போயிடுவேன்!
நகைசுவை என்ற பெயரில் முகம் சுளிக்க வைக்கிறார்கள்.
அன்பின் கோமு அக்கா - ஆதங்கம் புரிகிறது - என்ன செய்வது - இக்காலத்தில் திரை உலகில் இத்தனையும் தேவைப் படுகிறதாம். ம்ம்ம் - நல்ல சிந்தனை - நல்வாழ்த்துகள் அக்கா - நட்புடன் சீனா
Post a Comment