தொடருவோர்

Saturday, July 16, 2011

காயமே இது பொய்யடா.ஜூலை மாத பிட் போட்டி




காயமே இது பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா

 பார்க்கப் போனா இந்த ,
காத்தடைத்த 'பை'தானே எங்களுக்கு சோறு போடுது.
நாங்க,பை மட்டும் வாங்கினா போதும் ,காத்து எங்களுக்கு பீச்சிலே கண்ணுலே படாம கொட்டிக் கிடக்குது .
பச்சை சிகப்பு மஞ்சள்ன்னு  , நிறம் பாக்காம,
சின்ன பை பெரிய பைன்னு அளவு பாக்காம ,
உருண்டை முட்டை ன்னு ,வடிவம்  பாக்காம ,
எந்தப் பையானாலும் காத்து பேதமில்லாம அடையுது.வந்து போற ,

குழந்தைகள் ,பெரியவர்கள்ன்னு, ,சுட்ட பிறகு, பை அழியுது.
காத்து மட்டும்  மறுபடியும் ,காத்தோட கலக்குது.
அதே காத்து ,மறுபடியும் பைக்குள் அடையுது.
 அந்த ஆண்டவன் பை வாங்கினான் ,காத்தைக் கலந்தான்,பூமியில் உருட்டி விட்டான்..பாக்கப் போனா,நாமும் இந்த பலூன்தான் .
 

இங்கே  அந்த இறைவன் செய்ற வேலையைத்தான் நானும் செய்கிறேன்.
   இதுதான் வாழ்க்கைன்னு அவன் சொன்னதை,
   ,நான் ,மேடை போடாம மைக் இல்லாம, உங்க எல்லாருக்கும் சொல்லிட்டுதான்  இருக்கேன்.

இதுதான் வாழ்க்கைன்னு  புரிஞ்சு கொள்ளுங்க.இனிமையா வாழக் கற்றுக் கொள்ளுங்க.

தமிழிஷ் ஓட்டுப் பெட்டி பார்த்து, ஓட்டு போட்டுட்டு போங்க ப்ளீஸ்

19 comments:

சகாதேவன் said...

பலூனில் ஊதும் காற்றுக்கு
இத்தனை அர்த்தமா?
போட்டோ கம்போஸ் பண்ணியது அருமை.
பரிசு பெற வாழ்த்துக்கள்.

சகாதேவன்

goma said...

நன்றி சகாதேவன்

கலாநேசன் said...

good post

வெங்கட் நாகராஜ் said...

நல்ல புகைப்படம்.. அதற்கான விளக்கமும் மிக அருமை. ”காயமே இது பொய்யடா” என்பதைத் தான் இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை பலருக்கு.

middleclassmadhavi said...

பலூன் தத்துவங்கள் அருமை!

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமை

குணசேகரன்... said...

வித்தியாசமான பதிவு.. சூப்பர்

goma said...

குணசேகரன்...

T.V.ராதாகிருஷ்ணன்

middleclassmadhavi

வெங்கட் நாகராஜ்

கலாநேசன்

அனைவருக்கு நன்றி
15ம்தேதி பிட் போட்டிக்குப் புகைப்படத்தை அனுப்பினேன்.
மறுநாள் அதிகாலை கையில் காப்பியுடன் கணினிமுன் அமர்ந்த அரைமணி நேரத்தில் உருவாகியது.

திவா said...

அது என்ன காபின்னு சொல்லிடுங்க!

goma said...

கொஞ்சம் அனுபவ அறிவும் ,கொஞ்சம் வேதாந்தமும் கலந்து ,
நல்ல கருத்தை,ரொம்பவும் க்சப்பில்லாமல்,மீடியமாக டிக்காக்‌ஷனாகத் தயார் பண்ணி, தெளிந்த எண்ணம் ,என்ற பால் கலந்து,வேடிக்கை என்ற ஜீனி சேர்த்துத் தயாரித்த காப்பி...
பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கு.[இன்றைக்கு ம்ட்டும் ஸ்பெஷல்..தினமும் இப்படி காப்பி போட்டால் கட்டுப்படியாகாது.

[இதுக்கு கேக்காமலேயே இருந்திருக்கலாம்..திவா புலம்புகிறார்.
”திவா!!உனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்...111”

“என்னது இன்னமும் வேணுமா????

ஸ்ரீராம். said...

சிந்தனையைத் தூண்டி விட்டீர்கள். புகும் இடத்தின் வடிவம் எடுக்கும் தண்ணீர், காற்று போல புகும் உடலின் குணம் எடுக்கும் ஆன்மா...(அப்பாதுரை எழுதும் நசிகேதவேன்பா ப்ளாக்ல படிச்சது ஞாபகம் வந்ததோட, அதை ஒரு இடத்துல யூஸ் பண்ற வாய்ப்பும் கிடைத்தது...!)

goma said...

ஸ்ரீராம்
நன்றி.எனக்கு அப்பாதுரை பிளாக் விலாசம் சொல்லுங்களேன்.
என் கருத்து ஒத்த அவரது கருத்தை வாசிக்க ஆவல்

ஸ்ரீராம். said...

http://nasivenba.blogspot.com/

இராஜராஜேஸ்வரி said...

இதுதான் வாழ்க்கைன்னு புரிஞ்சு கொள்ளுங்க.இனிமையா வாழக் கற்றுக் கொள்ளுங்க.//
பயனுள்ள அழகான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

Lakshmi said...

பயனுள்ள அழகான பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.

goma said...

ஸ்ரீராம்.
நன்றி .
----------

இராஜராஜேஸ்வரி

பயனுள்ள அழகான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

பாராட்டுக்கு நன்றி
----------------------
Lakshmi

பயனுள்ள அழகான பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்கு நன்றி லஷ்மி

கோமதி அரசு said...

//குழந்தைகள் ,பெரியவர்கள்ன்னு, ,சுட்ட பிறகு, பை அழியுது.
காத்து மட்டும் மறுபடியும் ,காத்தோட கலக்குது.
அதே காத்து ,மறுபடியும் பைக்குள் அடையுது.
அந்த ஆண்டவன் பை வாங்கினான் ,காத்தைக் கலந்தான்,பூமியில் உருட்டி விட்டான்..பாக்கப் போனா,நாமும் இந்த பலூன்தான் .//

உண்மை உண்மை.

வாழ்க்கை தத்துவத்தை எளிமையாய் விளக்கியதற்கு நன்றி.

goma said...

நன்றி கோமதி அரசு.

cheena (சீனா) said...

அன்பின் கோமு அக்கா - தத்துவம் அருமை - காற்று புகுவதும் வெளியேறுவதும் மறுபடி புகுவதும் - புகுந்த இடத்தின் வடிவமெடுப்பதும் - அடடா அடடா - புரிந்து கொள்ள வேண்டிய தத்துவம் - காயமே இது பொய்யடா - காற்றடைத்த பையடா ....... நல்வாழ்த்துகள் கோமு அக்கா - நட்புடன் சீனா

list