பட்டமும் கயிறறுந்து ,
சட்டம் மட்டும் என்றானது.
மரமும்,.இலைகள் உதிர்ந்து
கிளைகள் மட்டும் ,என்றானது..
வேர்களும் கிளைகளும் ,
உறுதியாக இருந்தால்
மீண்டும் இலைகள் துளிர்க்கலாம்
எண்ணமும் செயலும்
நல்லதாய் இருந்தால்
என்றுமே ஏற்ற்மதான் என்று
சொல்லாமல் சொல்கிறது,மரம்
கட்டுப்பாட்டை மீறி ஆடி கிழிந்த பட்டம்
மறுபடியும் பட்டமாகுமா?
தலைகால் புரியாமல்
ஆகாயத்தில் ஆட்டம் போட்டால்,
அடுத்தது வீழ்ச்சிதான்.என்று
தன் அனுபவத்தில் பாடம்
கற்றது பட்டம்..
அமைதியே உயர்ந்தது என்றுஅழகாக உணர்த்தி நிற்கிறது ,மரம்.
ஆர்ப்பாட்டம் அழிவுக்கே என்று
உணர்த்தி,கிழிந்தது ,பட்டம்.
[இந்த படம் எடுக்க நான் எங்கேயும் போகவில்லை.
இன்று ’அதிகாலை ’7 மணிக்கு காபியுடன் பால்கனியில் அமர்ந்தவேளை என் ப்ளாட் வாசலில் நிற்கும் மரம் ,அதில் மாட்டிக் கொண்ட பட்டம் ,இரண்டுமாக சேர்ந்து கேமரா எங்கே ?என்று கேட்டன.]




19 comments:
அறுந்து உங்கள் வீட்டுக்கருகில் இருந்த மரத்தில்
தொங்கிய பட்டத்திற்கு நன்றி
இல்லையெனில் இப்படி ஒரு படைப்பு கிடைக்க
வாய்ப்பே இல்லாமல் போயிருக்கும்
பட்டம் குறித்த தங்கள் முந்தைய
சிறந்த கவிதையும் இச் சமயத்தில்
என் நினைவில் வந்து போனது
நல்ல படைப்பு தொடர வாழ்த்துக்கள்
ரமணி வாழ்த்துக்கு நன்றி
வீடு தேடி வந்து பாடம் சொன்ன ஆசான் ....
அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்.
ரொம்ப நல்ல கருத்து சகோதரி..ரொம்ப நல்லா இருக்கு ...
கவிதைக் கண்..
காட்சிகள் யாவிலும் சூட்சமம் தேடித் தேடியே தொலையும் போல...
கமலேஷ்
நன்றி .....
தேடாமல் எதுவும் கிடைக்காது...
தானாய் தேடி வந்ததை விட்டால் வாழ்க்கையின் சூட்சுமம் விளங்காது...
நல்ல கவிதை.
கவிதையை விட /தானாய் தேடி வந்ததை விட்டால் வாழ்க்கையின் சூட்சுமம் விளங்காது... / - ரசித்தேன்!
ராமலஷ்மி நன்றி
மிடில்க்ளாஸ்மாதவி
கவிதையை விட /தானாய் தேடி வந்ததை விட்டால் வாழ்க்கையின் சூட்சுமம் விளங்காது... / - ரசித்தேன்!
சரியாகத்தான் ரசித்தீர்கள்...சில சமயம் நீண்ட கடிதத்தை விட ,
பி.கு.வில் அருமையான விஷயங்கள் அமைவதுண்டு..
அமைதியே உயர்ந்தது என்று
அழகாக உணர்த்தி நிற்கிறது ,மரம்.//
அருமையாய் உணர்த்திய கவிதைக்கு
பாராட்டுகள்.
இராஜராஜேஸ்வரி
பட்டம் எனக்கு பாடம் எடுத்தது ,நான் கற்ற பாடத்தை அனைவரும் அறிய பதிவிட்டேன்.
பட்டத்துக்கு நன்றி .
இதுபோலவே நிறைய பாடங்கள் கற்று ந் நிறைய பதிவிடுங்கள்.
வரிகளும் கருத்தும் மிக அருமை..பதிவுக்கு நன்றி!
சிறுதுரும்பும் பல் குத்த உதவும் அறுந்த பட்டமும் ஆசானாகும்..சரிதானே லஷ்மி.
ரவிகுமார்
நன்றி
www.classiindia.com Best Free Classifieds Websites
Indian No 1 Free Classified website www.classiindia.com
No Need Registration . Just Post Your Articles Get Life time Income.
Life time traffic classified websites.Start to post Here ------ > www.classiindia.com
வாழ்க்கை பாடத்தை உணர்த்தும் அருமையான கவிதை.
கவிதை வந்ததும் பட்டம் வந்ததா?
பட்டம் வந்தபின் கவிதை வந்த்தா?
உங்களுக்கு பட்டம் பார்த்தவுடன் கவிதை வந்து இருக்கும் சரியா?
வாழ்த்துக்கள் வரகவிக்கு.
கோமதி அரசு
கிழிந்த பட்டம்தான் என் கற்பனை அலையை கிளப்பி விட்டது
நன்றி கோமதி
தினம் வீட்டிலும் வெளியே செல்லும்போதும் நிறைய காட்சிகள் உன் கேமரா எங்கே என்று கேட்கும். ஓடி எடுத்தால் பாட்டரி டௌன்.
சகாதேவன்
சகாதேவனுக்கு தினம் ஒரு பாடம்....
நாம் சாப்பிட உட்காரும் நேரம் கேமராவுக்கும் ஈயப்படும் என்று இருந்தால் நல்லது
Post a Comment