தொடருவோர்

Sunday, March 14, 2010

முக்கனிக்குறள்

அதிகாரம்-19
புறங்கூறாமை
குறள்-190

ஏதிலார் குற்றம் போல் தங்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிக்கு.
பலர்,அடுத்தவர் செய்யும் சிறு சிறு தவறுகளைக்கூட, மலையாய் பெரிது படுத்திக் காணும் குணம் உடையவர்களாக இருப்பர்.
அதே சமயம் தன் பக்கம் இருக்கும் குறைகளை ,அவை எத்தனை பெரிதாக இருப்பினும் உணரத் தவறி விடுகின்றனர்.
மாறு பட்ட குணம் படைத்த இவர்கள் வள்ளுவரின் சிந்தனையைத் தூண்டி விட்டு,எழுத்தாணியைக் கூர்மைப்படுத்தியிருக்கின்றனர்.
அடுத்தவர் குறைகளைப் பெரிது படுத்திப் பார்த்து விமரிசனம் செய்யும் ஒருவன்,தன்னிடம் உள்ள குறைகளையும் அலசிப் பார்க்கத் துணிந்தால்,இந்த உலகில் தீது வர வழியுண்டோ? என்ற வினாவை நம் சிந்தனைப் பெட்டகத்தின் திறவுகோலாக்குகிறார்.
அனைவரும் ,மனதில் கல்வெட்டாய் செதுக்கிவைக்கவேண்டிய வரிகளை, இரண்டே வரிகளில் சொல்லிச் சென்றவர் ,இன்றும் எல்லோர் மனதிலும் வாழ்கிறார்


20 comments:

மைதீன் said...

தன குழந்தையை சரியாய் வளர்க்காமல், எங்கள் வீட்டு பிள்ளைகளை குறை சொல்லும் என் அடுத்த வீட்டுக்காரர் நினைவு வருகிறது.நன்றி

Chitra said...

குறள் தேர்ந்தெடுக்கும் அதே அளவு ஆர்வத்துடன், படங்களையும் தேர்ந்து எடுத்து இருக்கிறீர்கள். அருமை.

ராமலக்ஷ்மி said...

விளக்கம் வழக்கம் போல அருமை. படங்கள் விளக்கம் போல சுவை.

S Maharajan said...

வழக்கம் போல் விளக்கம் அருமை.

கோமதி அரசு said...

முக்கனி குறள் இனிமை.

சித்திரை விசு வரும் முன்னே முக்கனி தரிசனம்.
அருமை,அருமை.

T.V.ராதாகிருஷ்ணன் said...

உங்களை ஒரு தொடர் பதிவுற்கு அழைத்து இருக்கிறேன்..பார்க்கவும்

கண்ணா.. said...

அருமையான விளக்கம். எனக்கு பள்ளி தமிழ் வாத்தியார்தான் நினைவுக்கு வருகிறார்கள்.

படத்தேர்வு அழகு.

goma said...

நல்ல குறள் மனதில் நுழைந்து விட்டால்,நல்லவைகள் மட்டுமே நினைவுக்கு வரவேண்டும் அல்லாதவைகளுக்கு தாழிட வேண்டும்.

இது நான் சொல்லவில்லை ,என் மனசாட்சி சொன்னது .
சமயத்தில் என் நடை ,தளரும் போது கைத்தடியாய் ,மனசாட்சி வந்து தாங்கி நிற்கும்

goma said...

நன்றி ராமலஷ்மி

goma said...

குறள் தேர்ந்தெடுக்கும் அதே அளவு ஆர்வத்துடன், படங்களையும் தேர்ந்து எடுத்து இருக்கிறீர்கள். அருமை

குறள் மொழிபெயர்ப்பு என்கையில் தயாராக இருக்கின்றன,ஆனால் படங்கள் கண்டு பிடித்து இணைப்பதுதான் சேலஞ்சிங்&சுவாரஸ்யமான விஷயமாக,தெரிகிறது.


நன்றி சித்ரா

goma said...

நன்றி மஹராஜன்

goma said...

முக்கனி தரிசனம் ...எடுத்துச் சொன்னதற்கு நன்றி கோமதி அரசு

goma said...

T.V.ராதாகிருஷ்ணன்......

வழக்கமாய் :-))) தானே

goma said...

அப்படியா கண்ணா....

எனக்கும் என் தமிழ் டீச்சர் நினைவுதான் வரும்......ஆனால் அவர் சொல்லிக் கொடுத்த சமயம் நான் காதிலேயே போட்டுக்கொண்டதில்லை.....
அந்த லட்சணம்...

திவா said...

//மாறு பட்ட குணம் படைத்த இவர்கள்//
ஏன் மாறுபட்ட ன்னு சொல்லறீங்க? இதானே இயற்கை?

goma said...

//மாறு பட்ட குணம் படைத்த இவர்கள்//
ஏன் மாறுபட்ட ன்னு சொல்லறீங்க? இதானே இயற்கை?

கேள்வி கேட்டு பதில் சொல்லாம விட்டுட்டீங்க..

goma said...

ஏதிலார் குற்றம் போல் குறளுக்கு உதாரணம் தந்து உதவியதற்கு நன்றி திவா

மின்னல் said...

முக்கனியை பார்த்து ரொம்ப நாள் ஆச்சுங்க.ஒமனில் பலா பழத்திற்கு வாய்ப்பே இல்லை.போட்டோவில் பார்த்ததே மகிழ்ச்சி தான்.நன்றி.

goma said...

ஒமனில் நாங்கள் பார்க்காத பழங்கள் நிறைய இருக்குமே ,அவைகளைப் படமெடுத்து பரிமாறுங்களேன்

goma said...

மின்னல்
நம் நாட்டில் வண்டியில் கூறு போட்டு விற்கும் பலா ,தாய்நாட்டு நினைவுகளை எத்தனை பேருக்கு இப்படி எழுப்பிவிடுகிறதோ

list