Saturday, November 7, 2009

டீல் ஆர் நோ டீல்

சமீபத்தில் ஒளிபரப்பாகி வரும் டீல் ஆர் நோ டீல் நிகழ்ச்சியை மகளீர் நல சங்கங்கள் எதுவும் பார்க்க வில்லையா?

அப்படித்தான் தெரிகிறது.

10 -15 பெண்கள் வரிசையாக பரிசுத் தொகை சீட்டு வைத்திருக்கும் பெட்டியைத் தூக்கிக் கொண்டு நளினமாக வருகிறார்கள்.

ஜூனியர் சத்யராஜ் சிபி போன்றவர்கள் ,நான் பெட்டியைச் சொன்னேன்,என்று வழிவதும்,நான் பெட்டி வைத்திருப்பவர்களும் சேர்ந்து பரிசாகுமோ என்று நினைத்தேன் என்ற பாணியில் ஜொள்ளுவதும்......சகிக்கவில்லை.

அந்த பெண்கள் அழகிப் போட்டியில் கலந்து கொண்டிருக்கிறார்கள் என்றால் தவறாகப் படாது.விளம்பரத்துக்காக சோப்பு சீப்போடு நின்றால் ஓகே.
ஆனால் வெறும் கவர்ச்சிக்காக ,விளம்பரத்துக்கா இப்படி வரவழைத்திருப்பது
எனக்கு உசிதமாகப் படவில்லை.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

nellaitamil Social Bookmarking and Online Community

20 comments:

தமயந்தி said...

கோமாக்கா..ரிஷியோட‌ தொகுப்பே செய‌ற்கையாக‌ இருக்குது

நட்புடன் ஜமால் said...

நீங்களும் பார்க்காதீங்க ...

சின்ன அம்மிணி said...

எல்லா மேலை நாடுகள்ல இது உண்டு. ஆனா பாக்கத்தான் முடியாது. போர்

goma said...

தமயந்தி நீங்கள் சொல்வது சரிதான்

goma said...

நட்புடன் ஜமால் நட்புடன் சொன்னதேன் பேரில் நானும் அந்த நிகழ்ச்சியைத் தவிர்க்கிறேன்

goma said...

எல்லா மேலை நாடுகள்ல இது உண்டு. ஆனா பாக்கத்தான் முடியாது. போர்

நல்லா சொன்னீங்க சின்ன அம்மிணி

goma said...

வேறு எங்கும் காணாத ஒரு விளம்பர யுக்தியை நான் மும்பையில் பார்த்திக்கிறேன்.அங்கே விளம்பரங்களைப் பொது இடங்களில் வைப்பதற்கு 10,000 வரை ஆகலாம்.மிகவும் குறைந்த செலவில் அவர்கள் கண்டு பிடித்தது.
விளம்பர துணி பானர்களை இரு பக்கமும் பிடித்தபடி இரண்டு பேர்[அதுவும் அவர்களில் பெரும்பாலோர் தமிழர்கள்] பல மணி நேரம், மும்பையின் மக்கள் போக்கு வரத்து அதிகமான இடங்களில், நிற்க வைக்கப் பட்டிருப்பார்கள்.
அந்த இருவரும் கைகள் காய்த்துப் போகும் வண்ணம் கல் உடைக்கட்டும் ,மணல் அள்ளிக் கொட்டட்டும் அவர்கள் உழைப்புக்குத் தகுந்த ஊதியம் கிட்டினால் சந்தோஷம் .அதை விடுத்து அவர்களை ஒரு ஜடப் பொருளாக ,மரக்கிளைகளாக ,இரும்புக் கம்பங்களாகப் பாவித்து நடத்தப் படுவது எந்த வகையில் நியாயம்.இங்கே இவர்களின் ஏழ்மையை ஆதாயமாக்குவது மனிதாபிமானத்துக்கு எதிரானது அல்லவா?

சகாதேவன் said...

டிவியா, நோ டிவியா? என்று நாம்தான் முடிவு செய்யணும்

goma said...

நல்லாச் சொன்னீங்க சகாதேவன்

ஜெட் லாக் போயிந்தே.....
அப்படித்தானே?

திவா said...

//சமீபத்தில் ஒளிபரப்பாகி வரும் டீல் ஆர் நோ டீல் நிகழ்ச்சியை மகளீர் நல சங்கங்கள் எதுவும் பார்க்க வில்லையா? //
டீல் ஆர் நோ டீல் ன்னா என்ன? :-s

goma said...

திவா டிவி பக்கமே போறதில்லை போலிருக்கு.
வெறும் அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பி விளையாடும் ஒரு ஷோ.
பொறுமையும் நேரமும் இருந்தால் சனிக்கிழமை ஞாயிற்றுக் கிழமை இரவி 8 மணிக்கு பாருங்களேன்

thamizhini said...

namakku pidikkavaillai endraal paarkkaamal vittu vittu aduththa nikazhchchiyai paarkka poeha vaendiyadhudhaan...gomaammaa its so simple..varindhu katta aarambiththoemendraal.varindhu kolavadharkku mattumae naeram paththaadhu.. THE ULTIMATE IS TO KEEP GOING WITHOUT A HALT...TAKING WHAT YOU WANT AND LEAVING WHAT U DONT WANT..SARIYAAMMAA? suntv is an entertainer who works for money and cannot be expected to do the vice versa.. KEEP FILTERING AND KEEP A HAPPY GOING...

goma said...

SARIYAAMMAA?
சரிம்மா தமிழினி

thamizhini said...

By the way im inviting you to FACE BOOK.. pleez join us for all the MASTHI ...கேட்டதை எல்லாம் வாரி வழங்கும், எங்கள் அட்சய பாத்திரமாக விளங்கும் ,நம் நண்பனாகிய GOOGLE SEARCH BAR will help you in all ways...இல்லையென் றால் already are you there aa?? can have lots of fun with the IGNATIUS அறுந்த வாலுங்க.. there is a battle going on between the "பாவம் தமிழ் PAYYANS " and the அடப்பாவி தமிழ் ponnus"... i extend my cordial invitation to come and kalandhufy in the JYOTHI and get aikkiamaahified.. love and regards..விரைவில் எதிர்பார்க்கிேற்ாம் facebookகில்.. i know ur awonderful and cheerful friend of ours...longing for ur friendship ther too..I. C. A. V( IGNATIUS CONVENT ARUNDHA VAALUNGA)

T.V.Radhakrishnan said...

நோ டீல்

புளியங்குடி said...

விமர்சனத்துல வெளுத்துக் கட்றீங்க...

நிறைய பேருக்கு பிடிக்காத இதே நிகழ்ச்சி, 4 மொழிகளிலும் டிஆர்பில எகிறிட்டுப் போகுதே. இந்த மீடியாக்கள் எத வேணாலும் விப்பாங்க. இநதக் கொடுமைய என்னன்னு சொல்றது.

விஜயில் விவாத நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருப்பவர்கூட ரிஷியின் ஸ்டைலால் எச்சில் விழுங்கிக் கொண்டிருக்கிறார் என்பது உபரித் தகவல்.

goma said...

ரிஷியின் ஸ்டைலால் எச்சில் விழுங்கிக் கொண்டிருக்கிறார் என்பது உபரித் தகவல்.

புளியங்குடியின் முதல் வருகை.
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி
ரிஷியின் இந்த ஸ்டைல் எல்லாம் ரொம்பநாள் ஓடாது .......சகோதரா

புளியங்குடி said...

எனது கமென்டில் ஒரு திருத்தம்...

சனி ஞாயிறு நாள்களில் ஞாயிறுத் தொலைக்காட்சிக்கு கடுமையான பாதிப்பாம். முதல்வாரம் டிஆர்பில எகிறிட்டிருந்த டீலா நோ டீலா, இப்போது படுத்துவிட்டதாம். சின்னத்திரை மீடியா வட்டாரத்தில் விசாரித்துத் தெரிந்து கொண்டது.

goma said...

நான்தான் சொன்னேனே!!!!
இதெல்லாம் ரொம்பநாள் ஓடாதுன்னு

Sangkavi said...

இந்த நிகழ்ச்சிகளை பார்பதற்கு

குடும்பத்துடன் சந்தோஷமாக

பேசி மகிழலாம்..............