"என்ன தூக்கமா...?என்று அழைத்தவர் கேட்டால் எப்படி இருக்கும்?
சரி போகட்டும் அழைப்பை ஏற்க நேரமான, எரிச்சல் ,அவளுக்கு ...
'விசுக் விசுக்' என்று சமைலறைக்கும் வராண்டாவுக்குமாக வேலையை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்து கொண்டிருந்த சமயம் தொலை பேசி ஸ்டூலைக் கடக்கும் அந்த நொடியில் சிணுங்கியது அடுத்த சிணுங்கலுக்குள் எடுத்தால்
"உனக்கு வேற வேலையே கிடயாதா எப்பவும் phone பக்கத்திலேயேதான் உக்காந்திருப்பியா?"
உயிர் தோழி உசுப்பினால் என்ன செய்வீர்கள்?
இதை பாருங்கள்.
.ஒரு தோழிக்கு பேசி பல நாட்களாகி விட்டதே ,அவள் பல முறை அழைத்தும் என்னால் பேச முடியாமல் போனது குறித்த குற்ற உணர்வுடன்,[டிராப்ஃட் எடுப்பது ,போஃன் பில் கட்டப் போவது மிக்ஸி ரிப்பேருக்குத் தருவது போன்ற வேலைகளை ஒதுக்கி வைத்து விட்டு] நட்போடு அவளை அழைத்தேன்
என் குரல் கேட்டதும்
"ஏன்ன நானும் உன்னை மாதிரி வேலையில்லாமல் இருக்கேனு நினைச்சியா?"
எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்.
இனிமேல் உள் அழைப்பை மட்டும் அனுமதித்தால் போதும் வெளி அழைப்பு ,சிலிண்டர்,மினரல் தண்ணீர்,இத்தியாதி இத்தியாதி என்றிருக்க முடிவு செய்து விட்டேன்.
உங்கள் அனுபவம் எப்படி?





5 comments:
மீள்பதிவா? மீண்டும் மீண்டும் தொல்லை தொடர்கிறதா:)?
//உங்கள் அனுபவம் எப்படி?//
‘பிஸியா, இப்போ பேசலாமா, பிறகு கூப்பிடவா’ எனக் கேட்டு விட்டே பேசும் நண்பர்களுடனே நகர்கிறது என் அனுபவம். ஹி, ஏனெனில் ஐந்தாறு நிமிடங்களில் முடிக்கக் கூடிய சம்பாஷனையாக இருக்காது பாருங்கள்:)!
மீள்பதிவா? மீண்டும் மீண்டும் தொல்லை தொடர்கிறதா:)?
my karpanaich sattiyil sarakku kuraikirathu aakavEthAn ippadi 'from file' system .
one more reason [hi hi hi ]tamil font innum download pannavillai.
idhey avasthaigalodu paranthu vanthu phone edukkum pothu wrong number innum erichal..........idhu ennakku adikadi nadakkum anubhvam
நல்லா பல்பு வாங்கியிருக்கீங்க போல :-)
ஓஹோ!இதுக்கு பேர்தான் பல்பா?
என் வீட்டில் இருள் நீக்குவதெல்லாம் நான் இப்படி வாங்கின பல்புதான்...நல்ல வெளிச்சம் தரும்
Post a Comment