Tuesday, October 6, 2009

தானத்தில் சிறந்தது

வலது கை கொடுப்பதை இடது கை அறியக் கூடாது என்ற வாக்கியம் எப்பொழுது எங்கே பொருத்தமாகும்?
நாம் தருவது,பணமோ,உடல் உழைப்போ,உணவுப் பொருளோ இவைகளில் ஏதாவது ஒன்றானால் அடுத்தவர் கவனத்துக்குக் கொண்டு சொல்வது தேவை இல்லை.
ஆனால் அதுவே உடல் உறுப்பு தானம் என்றால் சொல்லி வைப்பது ,தெரியப்படுத்துவது மிக மிக அவசியம்.
காரணம்:
தானம் செய்வது வீணாகாமல் போவதைத் தடுக்க முடியும்.
இப்படியும் செய்யலாம் என்ற விஷயத்தை அடுத்தவர்கள் மனதில் ஏற்படுத்தலாம்
இந்த இரண்டு காரணங்களுக்காக, நான் நேற்று என் பிறந்த தினத்தன்று ,ஒரு நல்ல காரியம் செய்ய வேண்டும் என்ற உத்வேகத்தோடு ,கண்தான படிவத்தில் உறுதி மொழி செய்து சங்கர நேத்ராலயா இணையதளத்துக்கு அனுப்பி வைத்தேன். இதை அனைவரிடமும் பகிர்ந்து கொள்கிறேன்.


என் பிறந்த தினத்தன்று வாழ்த்து கூறிய சுவரொட்டி
தொலை பேசி மூலம் வாழ்த்திய ராமலஷ்மி,நானானி,டிவிஆர் அனைவருக்கும் நன்றி.

nellaitamil Social Bookmarking and Online Community

9 comments:

ராமலக்ஷ்மி said...

மிக நல்ல காரியம். என் பாராட்டுக்கள்.

சகாதேவன் said...

"பார்வை ஒன்றே போதுமே
பல்லாயிரம்......."
பாட்டு நினைவு வருகிறது.
".......ரூபாய் ஆகுமே"

நசரேயன் said...

//என் பிறந்த தினத்தன்று வாழ்த்து கூறிய சுவரொட்டி
தொலை பேசி மூலம் வாழ்த்திய ராமலஷ்மி,நானானி,டிவிஆர் அனைவருக்கும் நன்றி//

சொல்லவே இல்லையே அக்கா, ஒரு கட் அவுட் வச்சி இருப்பேனே நம்ம ஊரிலே

சின்ன அம்மிணி said...

Belated birthday wishes Goma Amma

goma said...

ராமலஷ்மி சகாதேவன்,நசரேயன் சின்ன அம்மிணி அனைவருக்கும் நன்றி .
sms மூலம் ஜிலு ஜிலுவென்று வாழ்த்திய புதுகைத் தென்றலுக்கும் நன்றி.
நசரேயன் கட் அவுட் எல்லாம் வைக்காதீங்க....அட்டர்லி பட்டர்லி வேஸ்ட்

T.V.Radhakrishnan said...

பாராட்டுக்கள்.

சண்முகம் said...

உங்களுக்கு பிறந்த நாளா அக்கா...,?
சொல்லவே இல்ல.....

கோமதி அரசு said...

உங்களுக்கு ,பாராட்டுக்கள்.
தானத்தில் சிறந்த கண் தானத்திற்கு,
உறுதி மொழி எடுத்துக் கொண்டதற்கு.

நானும் என் கணவரும் கண் தான படிவத்தில் உறுதிமொழி செய்து கொடுத்துள்ளோம்.(1997லில்)
மண்ணுக்கு போகும் கண்கள் பார்வை
அற்றவர்களுக்கு வாழ்க்கை அளித்து
வாழட்டுமே.

சுவரொட்டியில் பிறந்த நாள் வாழ்த்து
சொன்னேன் மீண்டும் வாழ்த்துகிறேன்.

வாழ்க வளமுடன்.

goma said...

நன்றி கோமதி அரசு
வாழ்த்துக்கு நன்றி.