வெளிநாட்டில் இருப்பவர்களுக்கும் உள்ளூரில் இருந்தும் வர இயலாதவர்களுக்கும் இந்த ஆல்பம் பதிவாகியிருக்கிறது.
-------------------------------
ஒரு வயது ,
குழந்தை போல்
நடப்பது என்னவென்று புரியாமல்,
அனைவரும் நம்மைக் காண வந்திருக்கின்றனர் ,என்ற
மகிழ்ச்சியுடன் கேக் வெட்டினார்.
எதிரே வந்து நின்று நெகிழ்ந்தவருக்கு ,
அன்புடன் ஆசி கூறினார்.
வந்தவர் யாரென்று பெயர் மறந்தாலும் ,
புன்னகை மறக்காமல் பூரித்துப் போனார்.
பள்ளிச் சிறுமியாய் பார்த்த அனைவரும்
அன்னையின் பாசத்தோடு ,
தன்னை அன்னையாக்கி அணைத்து ஆசி பெற்றதில்
ஆனந்தம் அடைந்தார்.
சென்ற ஆண்டை விட முதுமை இந்த முறை
அவரை அதிகமாகவே அரவணைத்துக் கொண்டிருப்பது,
எங்களுக்கு ,எந்த ஆண்டும் கவனத்தில் இது போல் பட்டதில்லை.
நோய் நொடி அண்டாமல் அவர் நலமாய் வாழ
இறைவனைப் பிரார்த்தித்து ,
2010லும் இதுபோல் அனைவரும் ஒன்று சேர
அந்த ஆண்டவனை வேண்டிக்
கேட்டுக் கொள்வோம் என்று கூறி
விடை பெற்றோம்






